MARC காட்சி

Back
திருநந்திபுர விண்ணகரம் விண்ணகரப் பெருமாள் கோயில்
245 : _ _ |a திருநந்திபுர விண்ணகரம் விண்ணகரப் பெருமாள் கோயில் -
246 : _ _ |a நந்திபுர விண்ணகரம்
520 : _ _ |a மன்னார்குடி தொடங்கி இந்த நாதன் கோயில் முடிய உள்ள பகுதிக்கே செண்பகாரண்யம் என்று பெயர். இத்தலம் வானமாமலை ஆதிக்கத்திற்கு உட்பட்டது. ஐப்பசி வெள்ளிக் கிழமையில் இங்கு தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் சர்வகாரிய சித்தியை உண்டு பண்ணுகிறதென்று புராண காலத்திலிருந்து இன்றும் உள்ள நம்பிக்கை. இப்பகுதியின் மண் மிகவும் பிரசித்தமானது. இந்த மண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்கள் இந்தப் பகுதிகளில் மிகவும் பெயர் பெற்றவை. மண்பாண்டங்கள் செய்வது இந்தப் பகுதியில் சிறந்த குடிசைத் தொழிலாகவும் விளங்கி வருகிறது. மேலும் இந்த மண் நெல்விளைச்சலில் அமோக விளைவைத் தருகிறது. எனவேதான் மண்ணில் இது போல் நகரில்லையென்று திருமங்கையாழ்வாரும் இந்த மண்ணைப் பற்றிப் பாடினார் போலும். இப்பெருமான் கையில் 5 ஆயுதங்களைக் கொண்ட பஞ்சாயுதனாகத் திகழ்கிறார், வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு இந்த ஐந்து ஆயுதங்களைப் பெற்றுள்ளார். திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.
653 : _ _ |a கோயில், வைணவம், பெருமாள், விஷ்ணு, திவ்யதேசம், மங்களாசாசனம், திருமங்கையாழ்வார், திருநந்திபுர விண்ணகரம், விண்ணகரப் பெருமாள், நாதன் கோயில், கும்பகோணம், தஞ்சாவூர், நந்திபுரம், நாதநாதன், செண்பகவல்லி, செண்பகாரண்யம், விஜயரங்க சொக்கப்ப நாயக்கர், சோழர்கள், காளமேகப் புலவர்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / பாண்டியர், விசயநகரர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
914 : _ _ |a 10.9227408
915 : _ _ |a 79.3726025
916 : _ _ |a நாதநாதன், விண்ணகரப் பெருமாள், யோக ஸ்ரீனிவாசன், ஜெகந்நாதன்
917 : _ _ |a ஜெகந்நாதன்
918 : _ _ |a செண்பகவல்லி
923 : _ _ |a நந்தி தீர்த்த புஷ்கரிணி
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் விண்ணகரப் பெருமாள் மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம். இப்பெருமான் கையில் 5 ஆயுதங்களைக் கொண்ட பஞ்சாயுதனாகத் திகழ்கிறார், வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு இந்த ஐந்து ஆயுதங்களைப் பெற்றுள்ளார். செண்பகவல்லித் தாயார் தனி திருமுன்னில் வீற்றிருந்த கோலம். கருடன், அனுமன் போன்ற சிற்பங்களும் இங்கு காணப்படுகின்றன. விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர் தமது இரண்டு மனைவியருடனும், தாயுடனும் இங்கு நின்றுள்ள சிற்பக் கோலம் மிகவும் அழகானதாகும்.
930 : _ _ |a பவிஷ்ய புராணம் (பவிஷ்யேர்த்ரபுராணம்) 7 அத்தியாயங்களில் பிரம்ம நாரதஸம்வாதம் என்ற பகுதியில் பிரம்மனுக்கும் நாரதனுக்கும் நடந்த உரையாடலாக இத்தல வரலாறு பேசப்படுகிறது. இந்த நந்திபுர விண்ணகரம் துவாபர யுகத்திலேயே நாதன் கோவில் என்றே அழைக்கப்பட்டது. “நாதன் உறைகின்ற நந்திபுர விண்ணகரம்” என்பதே திருமங்கையாழ்வாரின் பாடலிலும் பயின்று வந்துள்ளது. பாற்கடலில் எம்பெருமானின் பாதார விந்தங்களையே பற்றிக் கொண்டிருந்த பிராட்டிக்கு தேஜஸ் பொருந்திய எம்பெருமானின் திருமார்பைக் கண்டு, அவ்விடத்திலேயே எப்போதும் நித்ய வாசம் செய்ய வேண்டுமென எண்ணங் கொண்டு திருப்பாற்கடலின்றும் புறப்பட்டு, செண்பகாரண்யம் என்னும் இவ்விடத்தில் கடுந்தவம் செய்ய, தேவியின் பிரிவாற்றாமையைத் தாங்க முடியாத பெருமாள் ஒரு ஐப்பசி மாதம் சுக்கில பட்ச வெள்ளிக்கிழமை அன்று தேவிக்குப் பிரத்யட்சமாகி எண்ணப்படியே நெஞ்சில் திருமகளை ஏற்றுக்கொண்டார். கிழக்கு நோக்கி தவஞ்செய்த நிலையிருந்த பிராட்டியை பெருமான் எதிர்கொண்டு ஏற்றுக்கொண்டமையால் இத்தலத்தில் எம்பெருமான் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். செண்பகாரண்யத்தில் தேவி தவம் செய்தபடியால் செண்பகவல்லி என்றே திருநாமம். உற்சவரின் பெயர் ஜெகந்நாதன். எனவேதான் உற்சவரின் பெயரை வைத்தே இவ்வூர் நாதன்கோவில் என்றாயிற்று. திருமகளின் எண்ணத்திற்கு இசைந்து பிராட்டியை நெஞ்சில் ஏற்றுக்கொண்டதால் பெருமானுக்கு போக ஸ்ரீனிவாசன் என்பது பெயர். அதிகார நந்தி என்றும், நந்திகேஸ்வரர் என்றும் அழைக்கப்படும் சிவபெருமானின் வாகனமான நந்தி, ஒரு சமயம் மஹா விஷ்ணுவைக்கான வைகுண்டத்திற்கு வந்த போது காவலில் நின்ற துவாரபாலகர்களையுங் கேளாது உள்ளே புக முயன்ற போது துவார பாலகர்கள் தடுத்து, தங்கள் அனுமதி பெறாமல் செல்ல எத்தனித்த காரணத்தால், காரணம் காணா அளவுக்கு உன் உடம்பில் உஷ்ணம் எரிந்து கொண்டிருக்கக்கடவது என்று சபித்துத் திருப்பியனுப்பினர். தன்நிலையை சிவபிரானிடம் நந்தி உரைக்க, விஷ்ணுவின் துவாரபாலகர்கள் இட்ட சாபம், விஷ்ணுவின் சாபத்திற்குச் சமமானதாகும். இதைத் தீர்ப்பதற்கு ஒரே உபாயந்தான் உண்டு. யாரும் காணவியலா மஹாவிஷ்ணுவின் நெஞ்சில் இடம் பிடிக்க திருமகள் தவம் புரிந்த செண்பகாரண்யம் தான் காரணம் காணா இவ்வியாதியைப் போக்க நீ தவமிருக்க சிறந்த இடமாகும். எனவே அங்கு சென்று திருமாலைக் குறித்து தவமிருந்து சாபத்தைப் போக்கிக்கொள் என்றுரைக்க, அவ்விடம் யாண்டுளது என நந்தி வினவியதற்கு, அச்செண்பகாரண்யம் என்பது பூலோகத்தில் சக்ரபடித் துறைக்கு (குடந்தைக்கு) தென்பால், மன்னார்குடிக்கு வடபாலும், விண்ணகரத்திற்கு (உப்பிலியப்பன்) மேற்கேயும், அரங்கத்திற்கு தெற்கேயும் உள்ளதெனத் தெரிவிக்க நந்தியும் அவ்விடத்தே வந்து நெடுங்காலம் கடுந்தவம் செய்ய உடனே மஹாவிஷ்ணு தோன்றி சாபந்தீர்த்து வேண்டிய வரம் கேள் என்று சொல்ல இத்தலம் எனது பெயராலேயே விளங்க வேண்டும் என்று சொல்ல அன்று முதல் நாதன் கோவிலாய் இருந்த இத்தலம் நந்திபுரவிண்ணகரமாயிற்று. தற்போது நந்திபுரவிண்ணகரம் ஒரு மிகச் சிறிய கிராமமாகத் திகழ்ந்தாலும் ஒரு காலத்தில் புகழ்பெற்றிருந்த தன்மையைப் பார்த்த மாத்திரத்தில் உணரமுடிகிறது. விஜயரங்க சொக்கப்ப நாயக்கர் என்னும் நாயக்க மன்னர் தன் அன்னைக்குத் தோன்றிய காரணம் காண இயலா (குணமநோய் மாதிரி) நோயை நீக்க வேண்டி இப்பெருமானிடம் இரைந்து நிற்க, அவ்விதமே நோய் நீங்கியதால் இக்கோவிலுக்கு பல அரிய திருப்பணிகள் செய்தார். ஒரு ராஜா அணிய வேண்டிய சகல ஆபரண அணிகலன்களுடன் - நாயக்க மன்னர் தமது இரண்டு மனைவியருடனும், தாயுடனும் இங்கு நின்றுள்ள (சிற்பங்கள்) கோலம் மிகவும் அழகானதாகும். இந்த ஊர் காளமேகப் புலவரின் பிறப்பிடம். இப்பெருமான் மீது அபாரமான பக்திகொண்டவர் இவர். இங்கு உள்ள பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மற்ற திவ்ய தேசங்களில் கிழக்கு நோக்கியே உள்ள பெருமாள் இங்கு மேற்கு நோக்கி இருப்பதற்கான காரணத்தை வரலாற்றில் கண்டோம். இதற்கு இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது சிபிச் சக்கரவர்த்தி புறாவுக்கு அடைக்கலம் தந்து புறாவின் எடைக்குச் சமமான சதையைத் தனது உடம்பிலிருந்து அறுத்து வைத்தும் நிறையாமல் இறுதியில் தானே தராசில் அமர்ந்தார் என்பதை நாம் அறிவோம். இந்த அரிய தர்மத்தின் சிறந்த நிகழ்ச்சியை காணவே கிழக்கு நோக்கி அமர்ந்த பெருமாள் மேற்கு நோக்கி திரும்பி விட்டதாகவும் கூறுவர். இதற்கு ஆதாரம் இல்லை. இது கர்ண பரம்பரையாக அப்பகுதியில் வழங்கப்பட்டு வரும் கதையாகும்.
932 : _ _ |a இத்திருக்கோயில் விமானம் மந்தார விமானம் என்னும் கலைப்பாணியைக் கொண்டு விளங்குகின்றது. நாயக்க மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. மண்டபத்தில் விளங்கும் தூண்கள் விசயரங்க சொக்கப்ப நாயக்கர் காலத்தவையாகும்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a உடையாளூர் சிவன் கோயில், பால்குளத்தன் கோயில், பழையாறை சோமேசுவரர் கோயில், பாம்படையூர் பகவதி அம்மன் கோயில், கொருக்கை பிரம்மபுரீசுவரர் கோயில்
935 : _ _ |a இத்தலம் கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது. நாதன் கோவில் என்றால் தான் எல்லோருக்கும் தெரியும் கும்பகோணத்திலிருந்து கொருக்கை என்னும் ஊருக்கு வந்து அங்கிருந்து 11/2 மைல் நடத்தும் இத்தலத்தையடையலாம். வலங்கை மானிலிருந்தும் இதே தொலைவுதான்.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a நாதன் கோயில்
938 : _ _ |a கும்பகோணம்
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a கும்பகோணம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000221
barcode : TVA_TEM_000221
book category : வைணவம்
cover images TVA_TEM_000221/TVA_TEM_000221_திருநந்திபுரவிண்ணகரம்_விண்ணகரப்பெருமாள்-கோயில்-0001.jpg :
Primary File :

cg103v066.mp4

TVA_TEM_000221/TVA_TEM_000221_திருநந்திபுரவிண்ணகரம்_விண்ணகரப்பெருமாள்-கோயில்-0001.jpg

TVA_TEM_000221/TVA_TEM_000221_திருநந்திபுரவிண்ணகரம்_விண்ணகரப்பெருமாள்-கோயில்-0002.jpg